3
கோவாவில் பாஜக அரசின் பெரும்பான்மையை நிரூபிக்க நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் வெற்றி பெற்றுள்ளார். 22 சட்டமன்ற உறுப்பினர்கள் மனோகர் பாரிக்கருக்கு ஆதரவாகவும், 16 சட்டமன்ற உறுப்பினர்கள ; எதிராகவும் வாக்களித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடம் கோவாவில் பாஜக ஆட்சி அமைத்துள்ளது.
அதிகார துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காங்கிரஸ்கட்சி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததனைத் தொடர்ந்து மனோகர் பாரிக்கர் இன்று அவரது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love