குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்
இலங்கையிலிருந்து லண்டன் வந்த ஒருவர் கீத்ரோ விமான நிலையத்தில் வைத்து விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இன்று காலை கொழும்பு கட்டுநாயக்கா விமானநிலையத்தில் இருந்து பறப்பட்ட பிரித்தானியாவுக்கான எயர்லங்கா விமானத்தில் வந்த ஒருவரே இவ்வாறு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
லண்டனின் கீத்ரோ விமானநிலையத்தில் விமானம் பிற்பகல் 2 மணியளவில் தரையிறங்கிய போது பயணிகளை இருக்கைகளில் அமருமாறு அறிவித்த விமானப் பணியாளர்கள் மெட்ரோபாலிரன் பொலிசாரின் பரிசோதனையின் பின்பே பயணிகள் இறங்குவதற்கு அனுமதிக்கப்படுவர் என அறிவித்தனர்.
இதனையடுத்து இலங்கையிலிருந்து பயணித்த இலங்கை சொந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டமைக்கான காரணங்கள் எவையும் தெரிவிக்கப்படவில்லை
Spread the love
Add Comment