உத்தரகாண்ட் மாநில முதலமைச்சராக திரிவேந்திர சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில், பாஜக வெற்றி பெற்றதையடுத்து, இன்று நடைபெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், திரிவேந்திர சிங் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து நாளையதினம் பாஜக அமைச்சரவை பதவியேற்கிறது. திரிவேந்திர சிங் தோய்வாலா தொகுதியில் 24,000 வாக்குகள் வித்தியாசத்தில், காங்கிரஸ் கட்சியின் ஹிரா சிங்கை தோற்கடித்து வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Add Comment