பெருவில் பெய்து வரும் கனமழை காரணமாக 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்கு தொடர்ந்து 3நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இந்த கனமழையானது பெருவில் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தில் மட்டும் பெருவில் கனமழை காரணமாக இதுவரை 62 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12,000 பேர் வீடுகளை இழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழையில் சிக்கிக் கொண்டவர்களை மீட்கும் பணிகள் இடம்பெறுவதுடன் வீடுகளை இழந்தவர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Spread the love
Add Comment