இலங்கை பிரதான செய்திகள்

யாழில் அதிபர், மற்றும் ஆசிரியர் ஒருவரால், நாசமாகும் கல்லூரி – காதோடு காதாக –அராலியூர் குமாரசாமி:-

பக்கத்து காணிக்குள் கள்ளத் தனமாக இறங்கி இளநீர் பிடுங்கி குடித்த அனுபவம் இருக்குதா. மாங்காய் பிடுங்கித் தின்ற அனுபவம் இருக்குதா. இளவயதில் தான் இப்படியான காரியங்களை செய்திருப்போம். வயது வந்து இப்படியான காரியங்களைச் செய்ய மனம் விடாது பாருங்கோ. ஊருக்குள் கெட்ட பெயர் வந்துவிடும் என்ற காரணத்தால் ஆசையிருந்தும் அதனை அடக்கிக் கொண்டிருப்போம். ஆனால் இப்பொழுது இளம் வயதினரைவிட வயது வந்தவர்கள் அதிகம் பேர் இப்படியான காரியங்களில் இறங்கிவிடுகின்றனர். அதுவும் படித்து உயர் பதவிக்கு வந்தவர்கள் அரச நிர்வாக அதிகாரிகள் செய்வதைப் பார்க்கின்ற போது தான் இந்தக் கண்றாவியை நாமும் பார்க்க வேண்டியிருக்குது என்ற குற்ற உணர்வு ஏற்படுகிறது.

யாழ்.நகரப் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் அதிபராக இருக்கின்றவர் செய்கின்ற களவுகள் தொடக்கம் பாலியல் சேட்டைகளைப் பார்த்தால் இந்த வயதில் இவர் இப்படி என்றால் இளம் வயதில் இவர் பட்டபாட்டை கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அளவுக்கு போய்விடுகிறது. இவரால் இந்தக் கல்லூரியின் வளர்ச்சி பின்தங்கிய நிலைக்கு சென்று கொண்டிருப்பது மட்டுமல்ல இந்தக் கல்லூரியில் கல்வி கற்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகும் வீதமும் குறைந்து கொண்டு செல்கிறது. மேலும் இவரைப் பார்த்து இந்தக் கல்லூரி உப அதிபரும் ஆசிரியர்களும் தாமும் தீய செயற்பாட்டில் இறங்கிவிடுகின்றனர்.

யாழிற்கு போதைப் பொருள் வந்தது தொடக்கம் வாள் வெட்டுக் குழு உருவானது வரை இந்தக் கல்லூரிக்கு முக்கிய இடம் இருக்கிறது. வகுப்பில் முதலாம் பிள்ளைகளாக வலம் வரும் மாணவர்கள் தான் இதற்கும் முதலாவதாக வலம் வருகிறார்கள். இந்த மாணவர்கள் வழி தவறிப் போவதற்கு இந்த அதிபரும் ஆசிரியர்களுமே காரணமாக அமைகின்றார்கள்.

இந்தக் கல்லூரிக்கு உதவி செய்வதற்கு ஆயிரம் பேர் இருக்கிறார்கள். தேவைக்கு அதிகமாக பணமாக இருந்தாலும் சரி பொருள்களாக இருந்தாலும் சரி கிடைத்துவிடுகிறது. அந்தப் பணத்தையும் பொருள்களையும் வைத்து கல்லூரியை மட்டுமல்ல மாணவர்களின் கல்வியை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கையையும் எடுக்க வேண்டும். இதைவிட்டு தனக்கு வந்த நிதியாக அதிபர் அதனைப் பயன்படுத்துவது எந்தவிதத்தில் நியாயமாகும். இந்தக் கல்லூரியைச் சேர்ந்த ஒருவர் கல்லூரியில் நடக்கும் நிர்வாக சீர்கேட்டை தடுக்கச் சொல்லி வடக்கு ஆளுநர் மற்றும் மத்திய கல்வி அமைச்சர் உட்பட சம்பந்தப்பட்டவர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

கல்லூரிக்கு சொந்தமான 172 கூரைத் தகடுகள் மற்றும் யன்னல் பிரேம் உட்பட கட்டட உபகரணப் பொருள்களை அதிபர் விற்றிருக்கிறார். இந்தப் பொருள்களை அருகில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் பராமரிப்பு உத்தியோகத்தராக இருக்கும் ஒருவருக்கு மலிந்த விலையில் விற்றிருக்கிறார். இவர் இந்தக் கல்லூரியில் பராமரிப்பு உத்தியோகத்தராக வேலை செய்து பின்னர் அருகில் உள்ள கல்லூரிக்கு இடமாற்றம் பெற்றுச் சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இடமாறிச் சென்றும் இந்தக் கல்லூரி அதிபருக்கும் இவருக்குமான தொடர்பு துண்டிப்பு இல்லாமல் தொடர்கிறது. இப்படிப்பட்ட ஓட்டுமாட்டு வேலைகளை இவர் மூலம் தான் அதிபர் செய்து வருகிறார்.

கிரிக்கெட் கோச்சராக தனக்கு தெரிந்த ஒருவரை கல்லூரிக்கு நியமித்து அவரை வைத்து விளையாட்டுப் பொருள்களை வெளியே விற்றிருக்கிறார். அதிபரின் இந்த நடவடிக்கையைப் பார்த்து கோச்சும் செய்து பார்த்திருக்கிறார். ஆனால் பிடிபட்டு போனார். ஒரு நாள் கல்லூரியில் மாணவர் தலைவர் கூட்டம் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்த நேரம் பார்த்து கோச்சும் 19 வயதுக்கு கீழ்ப்பட்ட கிரிக்கெட் அணியும் சேர்ந்து விளையாட்டு மைதானத்துக்கு பக்கத்தில் உள்ள வீட்டுக்குள் புகுந்து கதவை உடைத்து பொருள்களை களவெடுத்திருக்கிறார்கள். வீட்டின் உரிமையாளர் பொலிஸில் முறைப்பாடு செய்ய பொலிஸ் இவர்களை பிடித்து உள்ளே போட்டது. உடனடியாக விடயம் அறிந்த அதிபர் தனது கல்லூரியில் படிப்பிக்கும் 3 ஆசிரியர்களை பொலிஸ் நிலையம் அனுப்பி பிணை வைத்து அவர்களை விடுவித்துள்ளார். பிறகென்ன அதிபர் கோச்சுடன் சேர்ந்து மைதானத்தில் அல்ல வகுப்பிலும் ஆடலாம் தானே.

கல்லூரியின் ….  ஆம் ஆண்டு விழாவுக்கு 62 இலட்சத்தை செலவு செய்ததாக மாணவர்களின் பெற்றோருக்கு அதிபர் சொல்லியிருக்கிறார். ஆண்டு மலரை 500 ரூபாய் படி விற்றிருக்கிறார். 6 ஆம் ஆண்டு மாணவர்களைச் சேர்ப்பதில் இருந்து உயர்தர மாணவர்களைச் சேர்ப்பது வரை இலட்சக் கணக்கில் பணம் வசூலித்திருக்கிறார். மகிந்தோதைய ஆய்வுகூட மையம் ஒன்றினை கல்லூரியில் நிறுவுவதற்காக 1.96 மில்லியனை பாடசாலை நிதியில் இருந்து எடுத்து செலவு செய்திருக்கிறார். விளையாட்டுத் துறைக்கென பெற்றோரிடம் இருந்து 40 இலட்சம் ரூபாவினை சேகரித்துள்ளார். அது மட்டுமா அதிபர் தன்னுடைய நண்பர்களுக்கு பாடசாலை கணக்கில் தேனீர் விருந்து ஒன்றினையும் அளித்துள்ளார். இது போதாது இன்னும் கூடுதலாக பணத்தை சூறையாட வேண்டும் என்று அதிபரும் அவரது நண்பர்களும் சேர்ந்து களத்தில் இறங்கினர். அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றை நிறுவினர். அதற்குத் தேவையான பணத்தை பாடசாலை நிதியில் இருந்து எடுத்திருக்கிறார்கள். இதற்கான கணக்கு நிர்வாகம் இல்லாத கோயில் கணக்காக இன்றும் இருக்கிறது.

எல்லாம் தெரிந்த சகலகலா வல்லவன் கமல், காதல் மன்னன் ஜெமினிகணேசன் போலவும் காதல் விளையாட்டிலிலும் இறங்கினார். மன்னாரில் உள்ள ஒரு பாடசாலையில் அதிபராக இருந்த போது அந்தப் பாடசாலையில் பெண் ஆசிரியை ஒருவருக்கு ஆசைவார்த்தை கூறி தனது தேவையை நிறைவேற்றியுள்ளார். மன்னார் போனால் இந்த பெண் ஆசிரியரை சந்திக்காமல் வரமாட்டார். இந்த பெண் ஆசிரியருடன் கதைப்பதற்கு இரவு வேளையில் இந்தக் கல்லூரியின் அலுவலக போனில் தொடர்பை ஏற்படுத்தி கதைத்துக் கொண்டே இருக்கிறார். பாடசாலை விடயமாக அல்லது தனிப்பட்ட விடயமாக கொழும்பு செல்லும் போது மாணவர்களின் தனக்கு பிடித்த தாய்மாரை தன்னுடன் கூட்டிக் கொண்டு போகும் போதை போன்ற பழக்கம் இவருக்கு உண்டு. தனது மனைவியை கொழும்புக்கு கூட்டிக் கொண்டு போனது குறைவு.

இவரைப் பார்த்து இந்தக் கல்லூரி ஆசிரியர்கள் ஒருசிலரும் களத்தில் இறங்கியுள்ளனர். சாதாரண தரத்தில் பாடம் எடுக்கும் ஆசிரியர் ஒருவர் பெற்றோரை இழந்த மாணவர்களின் தாய்மார்களின் போன் நம்பர்களை எடுத்து வைத்திருந்து அவர்களின் பிள்ளைகளின் படிப்பு சம்பந்தமாக கதைக்க வேண்டும் என்று கூறி தமக்கு பிடித்த தாய்மாரை அழைத்து பாலியல் இலஞ்சம் கேட்கிறார். இதற்கு இணங்காத தாய்மார்களிடம் பிள்ளைகள் இந்தக் கல்லூரியில் தொடர்ந்து படிக்க வேண்டும் என்றால் தமது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று வற்புறுத்தி தமது தேவையை நிறைவு செய்கிறார்கள். அண்மையில் வலிகாமப் பகுதியில் வசிக்கும் ஒரு மாணவரின் தாய்க்கு நேசமான ஒரு ஆசிரியர் I miss you love என்று பொதிக்கப்பட்ட காட் ஒன்றினை அனுப்பியும் உள்ளார். 2015 ஆம் ஆண்டு 6 ஆம் வகுப்பு புதிய மாணவர்களுக்கு அனுமதி வழங்கிய போது பாலியல் இலஞ்சம் பெற்று அனுமதி வழங்கியதாக ஏற்கனவே குற்றச்சாட்டுகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு காலத்தில் இந்தக் கல்லூரியில் மாணவர்கள் படிப்பதற்கு அனுமதி எடுக்க வேண்டும் என்றால் அவர்கள் முன்னர் படித்த பாடசாலையில் திறமையுள்ளவர்களாக இருந்ததிற்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். இன்று அப்படியல்ல பணம் கொடுத்தால் இந்தக் கல்லூரியில் மாணவர்களை இலகுவாக சேர்த்து விடலாம். அல்லது பாலியல் இலஞ்சம் கொடுத்தால் மாணவர்களை பணம் கட்டாமல் சேர்த்து விடலாம். ஒரு தாய்க்கு பிறக்காத பிள்ளை சமூகத்தில் எப்படி வளருமோ அப்படித்தான் இந்தக் கல்லூரியின் அதிபர் தொடக்கம் ஆசிரியர்கள் சிலரின் செயற்பாடுகள் இருக்கின்றன. இவர்கள் மீது விசாரணை செய்து தண்டனை வழங்காது விடின் கல்விச் சமூகத்தின் முன்னேற்றதிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது உண்மை.

3 Comments

Click here to post a comment

Leave a Reply

 • தாங்கள் எனது இப் பதிவை தங்களது இணையத் தளத்தில் பிரசுரிக்க வேண்டும். – V.T – என்பவர் நேரடியாக எமக்கு அனுப்பி வைத்தது.

  ஆ.ர்

  எனது மகன் தற்போது குறித்த கல்லூரியில் கல்வி கற்கின்றார். அவர் புலமைப் பரிசில் வெட்டுப் புள்ளி ஊடாகச் சென்றவர். ஆனால் குறித்த பாடசாலையின் வெட்டுப் பள்ளியை விடக் குறைவாக எடுத்த மாணவர்கள் கல்வி அமைச்சு அனுமதி வர முன்பே அதிபரால் பணம் வாங்கப்பட்டு பின் கதவால் அனுமதி வழங்கப்பட்டு விட்டது. தரம் 6,7 மாணவர்கள் சிற்றுண்டிச்சாலையிற்கு போகும் போது தரம் 11, உயர் தர மாணவர்களால் பணம் பறிக்கப்படுவது அடிக்கடி நடக்கிறது. இது குறித்து பெற்றோர் சிலர் அதிபரை தொடர்பு கொண்டு முறையிட்ட போது அவர் கூறியது. wrong information .அவர் ஏற்கவே இல்லை. மாணவர்களில் அழகான தாய் உள்ள மாணவரின் தாய்மாரின் mobile phone நம்பர் எடுத்து தொல்லை கொடுக்கும் அதிபரின் வால் விசுவாசி ஆசிரியர் குறித்து முறையிட்டு எந்தப் பயனும் இல்லை. அந்த ஆசிரியருக்கு சக ஆசிரியர் வைத்துள்ள பட்டப் பெயர் அம்மா வாத்தி.

  இவ் வருடம் இல்ல மெய் வல்லுநர் போட்டி நடந்த போது மாணவர்களை காலை 8 மணிக்கே வரச் சொல்லு அவர்களுக்கு உணவு சிற்றுண்டி வசதி செய்து கொடுக்காமல் உடற்பயிற்சி மாணவர்களை பிற்பகல் 3.30 மணி வரையும் அடைத்து வைத்திருந்து அவர்களை மைதானத்தில் பசிக்களையில் தான் வாட்டி எடுத்தனர். அணி வகுப்பு மாணவர்கள் பலர் பசிக் களையால் பொத்து பொத்தென விழுந்தார்கள் . இல்ல விளையாட்டுப் போட்டி நடந்த போது O/L ,A/L மாணவர்கள் சிலர் வெத்திலை சப்பி துப்பியபடியே இல்ல வாசலில் நின்று கூச்சல் அடித்தமை சகிக்க முடியாதது.

  இவ் வருடம் தரம் 6 மாணவர்களின் அனுமதியின் போது கல்வி அமைச்சின் விதியை மீறி வெளிப்படையாகவே பண வசூல் நடந்தது.
  கால்கோள் விழா நடந்த போது KKS வீதியை பல நிமிடங்கள் தடைசெய்து பாண்ட் அடித்து ஊர்வலம் போனது சிறிய நிகழ்வுக்காக பெற்றோரை மணித்தியாலக் கணக்கில் இருத்தி வைத்து துன்பப்படுத்தினார்.
  தனது முன்னைய மன்னார் பாடசாலையில் தான் போட்ட டம்மி அதிபர், துறைத் தலைவர்களை இயக்குவதில் தான் கவனம் செலுத்துவதாகவும் தற்போதைய கல்லூரி நிர்வாகத்தைப் பற்றி அக்கறை பெரிதாக இல்லையென சேவை உணர்வுமிக்க ஆசிரியர்கள் குமுறுகின்றனர்.

  தரம் 6 இற்கு இவ் வருடம் மாணவர்களை அனுமதித்த கால்கோள் விழாவின் போது O/L எடுக்கும் வரையும் மாணவர்கள் ரியூசன் போகத் தேவையில்லை. நம்பர் ஆசிரியர்களைக் கொண்டது எம் கல்லூரி என்றார். ஆனால் முழுப்பாடவேளைகளும் ஆசிரியர்கள் போவது இல்லை. நாளாந்தம் 3, 4 பாடேவேளைகளுக்கு ஆசிரியர்கள் போவது இல்லை. அதுவும் English medium என்றால் படுமோசம் தமிழ், சமயம்,வரலாறு போன்ற தமிழ் மொழி மூல பாடங்களுக்கு மட்டுமே வகுப்பு நடைபெறுகிறது. மற்றவையெல்லாம் ரியூசனில் தான் தஞ்சம். பாடசாலையில் படிப்பிக்க மறுக்கும் தவறும் ஆசிரியர்கள் பெருந்தொகைப் பணத்தை ரியூசனில் கறந்து கொண்டு படுஜோராக கற்பிக்கின்றார்கள்.

  அதிபர் தனக்கு AC போட்டுக் கொண்டு வெகு ஜாலியாக இருக்கின்றார், ஆனால் சிறிய சிறிய வகுப்பறைகளில் 40 பேர் வரை அடைக்கப்பட்ட மாணவர்களோ வெக்கையில் புழுங்கித் தவிக்கின்றனர். மாணவர்கள் கொப்பி மட்டையால் விசிக்கினால் ஆசிரியர்கள் அதிபர் உத்தரவு எனக் கூறி தடுக்கின்றனர். அதே வேளை ஆசிரியர்கள் தாம் வியர்வை வராதிருக்க விசிறுகின்றனர். வருடத்தின் பெரும் பகுதி வெப்பம் உள்ள எமது நாட்டில் வகுப்பறைகளுக்கு FAN பூட்டுவது கட்டாயத் தேவை. யாழ் மாவட்டத்தில் உயர்புள்ளிகளை எடுக்கும் மாணவர்கள்நோயாளிகளாவது தான் மிச்சம்.

  2015 ஆம் ஆண்டில் பாடசாலையின் 125 வது ஆண்டு விழா கொண்டாடப்பட்ட போது அதிபர் சக்தி ரிவியின் சக்திமிக்க ஊடகவியலாளரை முன்னணிக்குவைத்து நடத்தினார். பின்கதவால்தனது பதவி நன்மைகளைப் பெற்றமைக்காக பாடசாலையின் முழுமையான விசுவாசிகளை எல்லாம் தூக்கி எறிந்தார்.
  தாங்கள் எனது இப் பதிவை தங்களது இணையத் தளத்தில் பிரசுரிக்க வேண்டும்.

  பாடசாலை இடைவேளைகளில் மாணவர்கள் கல்லெறிபட்டு சண்டை பிடிக்கும் நகழ்வு நடந்தால் அது குறித்து தண்டனை வழங்கப்படுவது இல்லை. மன்னார் சிந்தனை தான் இதனால் பாடசாலை நிர்வாகத்தைப் பற்ற அக்கறை இல்லை. நேர்மை உள்ள பழைய மாணவர்கள் எல்லாம் ஒதுங்குவதால் இவரது அதர்மம் நீளுகிறது. தேசிய பாடசாலை என்பதால் மாகாணம் வாய்மூடி மௌனிக்கிறது.
  Chat conversation end

  • Reg: http://globaltamilnews.net/archives/21410#comment-1850

   இத்தகைய செய்திகள் மீதான உண்மைத்தன்மை புறம் தள்ளி, ஒருபுறம், இருக்க, பத்தி எழுத்தாளர் முறையிட விரும்புகின்ற அல்லது வாசிப்பவர்களுக்கு கூற வருகின்ற செய்தி என்ன என்பது குறித்து விலாவாரியாக இக்கட்டுரையில் குறிப்பிட்டிருப்பின் நன்றாக இருந்திருக்கும். அதுவே தேவைப்பாடான விடயமும் கூட. ஏனெனில், அபத்தமாகவும் அதிகப்பிரசங்கித்தனமாகவும் உண்மைக்கு புறம்பாக சந்தேகங்களினை மட்டுமே முன்னிலைப்படுத்தி அல்லது தமது புகழ்ச்சிக்காகவோ அன்றி நன்மைக்காக எழுதப்படுகின்ற சமூக சூழலில் இத்தகைய செய்திகள் மீதான உண்மைத்தன்மை மழுங்கடிக்கப் பட்டு விடக்கூடாது என்பதில் மாற்றுக்கருத்தினை நான் கொண்டிருக்கவில்லை. இருப்பினும், முழுவதையும் வாசித்த பின்பும் குறிப்பிடட தலையங்கம் மற்றும் உள்ளடக்கம் முதலிய விடயப்பரப்புக்களில் அதிக கவனத்தினை செலுத்தியிருந்தேன். அனைத்து வகை பன்னிரு குற்றச்சாட்டுதல்களினையும் அவதானித்து சமூக மற்றும் சடட விடயப்பரப்புக்களுடன் ஒப்பு நோக்கினேன். உறுதிப்படுத்தலுக்கு

   மாறாக குறித்த விடயத்தில் சந்தேகத்திடமின்றி குற்றம் நிகழ்ந்ததாக கருதிவிடக்கூடிய எந்த ஒரு உறுதிப்பாடும் இருப்பதாக எனது கருத்தியலின் படி தெரியவில்லை.

   இருப்பினும், அதே கல்லூரியில் படித்து வெளியேறியவன் என்கின்ற வகையில், எனக்கும் கல்லூரிக்கும் இருக்கும் உறவு முறைமைகளினை முற்று முழுவதுமாக புறம்தள்ளி, சட்டம் சார் பின்புலத்தினை எனது நிபுணத்துவமாகக் கொண்டு செயற்படுகின்ற காரணத்தினால், வட புலத்து கல்வி நிலையில் சமூகப் பொறுப்புடைமை கொண்ட பிரஜை என்கின்ற வகையில் பின்வரும் கோரிக்கைகளினை இப்பத்தி எழுத்தாளர் சார் சமூகத்திற்கு முன்வைக்கின்றேன்.

   1. குறிப்பிட்ட குற்றச்சாட்டுதல்கள் பாடசாலை குறித்த நிர்வாக அலகிடம் பாரப்படுத்தப்படடனவா! அவ்வாறான செவிசாய்ப்புக்கள் அர்த்தமுடைத்ததாக மாற்றப்படுவதில் காணப்படட சிக்கல்கள் எவை !! சான்றாதாரங்கள் இன்மையா அல்லது பாதிக்கப்படடவர்கள் முன்வரவில்லையா!! அல்லது இப்பத்தி எழுத்தாளர் சார் சமூகம் அக்கறை கொண்டும், அரச தரப்பானது தொடர் நடவடிக்கைகள் குறித்து அக்கறை கொள்ளவில்லையா!

   2. மேற்படி இல 1ன் மீதான தங்கள் நடபடி முறைமையினை தயவு செய்து பகிரங்கப்படுத்துங்கள். எனக்கும் அறியத்தர விரும்பின் தயவு செய்து socialjusticeasia@gmail.com , swslanka@gmail.com ஆகிய மின் அஞ்சல் முகவரிக்கும் அறியத்தரவும்.

   3. மேற்படி இல 1ன் மற்றும் 2ன் மீதான ஒப்பு நோக்குகளுக்கு அமைவாக குறிப்பிடட பாடசாலை சமூகத்தின் முன்னைய மாணவர் சங்கத்திற்கும் மற்றும் குறிப்பிடட விடயத்தினை கையாளுகின்ற அமுக்கக்குழுக்களுக்கும் நான் கையகப்படுத்தக்கூடியதாகவும் அதன்வழி சிறந்த தீர்வினை வழங்கவும் முயற்சிக்கலாம்.

   4. இருப்பினும் தகவலின் மீதான தனி நபர் பாதிப்பு என்பதில் சந்தேகம் இருப்பின் அல்லது பாதிப்புக்குள்ளானவர் வேண்டிய நீதி முறை சார் அணுகு முறைகளினை தனிப்படட முறையில் கையாள்வதற்கும் உசாத்துணை செய்திட நான் தயாராக உள்ளேன் என்பதனை கூறி வைக்க விரும்புகின்றேன்.

   மேற்படியான விடயப்பரப்புக்கள் 30/04/2017 இலங்கை நேரம் 0500மணிக்கு முன்பதாக கவனிக்கப்படாது போயின் சந்தேகத்திற்கு இடமின்றி குற்றம் நிகழ்ந்ததாக கருதிவிடக்கூடிய எந்த ஒரு உறுதிப்பாடும் இல்லை என்றே கருத வேண்டியிருக்கும்.

   அத்துடன், உண்மைத்தன்மை நிரூபிக்கப்பட தவறப்படுமிடத்து சம்பந்தப்படட ஊடக நிறுவனம் குறித்த செய்தி தொடர்பில் தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தும்.

   உண்மைத்தன்மை நிரூபிக்கப்படுவதற்கான எமது செயற்பாட்டில் எம்மையும் மதித்து இணைத்து செயற்பட்டமைக்கு தங்களிற்கு முற்கூட்டிய நன்றிகளினை தெரிவித்துக்கொள்கின்றோம்.

   “கேடும் பெருக்கமும் இல் அல்ல; நெஞ்சத்துக்
   கோடாமை சான்றோர்க்கு அணி” (115)
   பொழிப்புரை : [பொருள்] கேடும் பெருக்கமும் [நியாயத்திற்கு] இடம் அல்ல; நெஞ்சத்தில் [நடுநிலைமை] தவறாமை சான்றோர்க்கு அணி.

 • ஆசிரியர் அவர்களுக்கு

  அண்மையில் உங்கள் இணையத்தில் யாழில் பிரபல பாடசாலை பற்றியும் அதன் அதிபர் பற்றியும் மிகவும் கீழ்த்தரமாக பொய் செய்திகளை வெளியிட்டுயிருன்தீர்கள். பெயர் குறிப்பிடாமல் எழுதியிருந்தாலும் நீங்கள் குறிப்பிட்ட ஒரு பாடசாலையை பற்றி எழுதியுள்ளிர்கள் என்பது தெளிவு. ஏனனில் அங்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் தனது பிழையான நடவடிக்கைகளுக்கு துணை போகாத காரணத்தால் நீங்கள் குறிப்பிட அவ்வளவு ஆதரமற்ற குற்றச்சாட்டுக்களையும் அதிபருக்கெதிராக கூறிவந்தார்.அவரால் தரப்பட்ட கடிதத்தை அப்படியே நீங்கள் பிரசுரம் செய்திருப்பது தெரிகிறது. உண்மைக்கு புறம்பாக எவ்வித ஆதாரமுமின்றி இவ்வாறு எழுதியது திட்டமிட்டு இப்பாடசாலையின் பெயரை அடையாளத்தையும் அழிப்பதற்கு எடுக்கப்படும் ஒரு சதி முயற்சியாகவே தெரிகிறது. ஒரு திட்டமிட்ட அழிப்பிற்கு இவ்வாறு சுயநலம் கொண்டவர்கள் பயன்படுத்தப்படுவது ஒன்றும் புதிதல்ல. யார் என்பது சிலருக்கு புரியாவிட்டாலும் இக்கல்லுரி மேல் பாசமும் பற்றும் கொண்ட பழைய மாணவர் மற்றும் நலன் விரும்பிகள் பலருக்கு உண்மை தெரியும்.

  ஆனாலும் ஒரு பத்திகையாளன் என்ற வகையில் ஆதாரமின்றி நீங்கள் எவ்வாறு மிகவும் பொய்யான செய்திகளை போடத்துணிந்தீர்கள் என்று கூறவும்.

  – மிகவும் கீழ்த்தரமான முறையில் நடத்தையை பிழையாக கூறியிருந்தீர்கள். அதற்கான ஆதாரம் என்ன? உங்களால் நிரூபிக்க முடியுமா? ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாணவனின் தாயுடன் கொழும்பு செல்வதாக எழுதியிருந்தீர்கள். அப்படியானால் அக்கல்லூரியில் படிக்கும் மாணவர்களின் தாய்மார் பிழையானவர்களா? அதிபர் மற்றுமின்றி அங்கு பயிலும் மாணவர்களையும் ஆதாரமின்றி பிழையாக தூற்றி உள்ளீர்கள். இக்குற்றச்சாட்டுக்கான ஆதாரம் என்ன?

  – கல்லூரிக்கு சொந்தமான கூரைத்தகடுகள் விற்கப்பட்டதாக கூறியிருந்தீர்கள். என்ன நடந்தது என்ற உண்மை தெரியுமா? டெங்கு பரிசோதனைக்காக வந்தவர்கள் அங்கு காணப்பட்ட இப்பொருள்களை உடனடியாக அகற்ற கூறியதால் உபஅதிபர் மற்றும் பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர் முன்னிலையில் அவர்களின் கையொப்பங்களுடன் ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரின் உறவினருக்கு இவை விற்கப்பட்டன. அதற்கான பத்திரங்களும் பாடசாலையில் உள்ளன. ஆனால் அதற்குரிய பணம் வாங்கியவரால் / இடையில் நின்றவர்களால் பாடசாலைக்கு கொடுக்கப்படவில்லை. இதனால் அதிபர் தனது சொந்தப்பணத்தில் இதை செலுத்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார். பாடசாலையை தொடர்பு கொண்டு இது உண்மையா இல்லையா தெரிந்துகொள்ளவும்.

  – கிரிக்கெட் கோச்சாக உள்ளவர், பேப்பரில் விளம்பரம் போட்டு வந்தவர்களில் விளையாட்டுத்துறை பொறுப்பாசிரியர் மற்றும் கிரிக்கெட் பொறுப்பாசிரியர் ஆகியோரின் நேர்முகப்பரீச்சையின் பின் தெரிவுசெய்யப்பட்டவர். அதிபருக்கு தெரிந்தவரும் அல்ல, அதிபரால் தன்னிச்சியாக தெரிவு செய்யப்படவுமில்லை.
  உங்கள் இணையத்தில் கூறியதுபோல் ஒன்றும் நடைபெறவில்லை. மாறாக விளையாட்டு பயிற்சின்பின் தண்ணிர் அருந்த இவர்கள் மதிலால் பாய்ந்து அவ்வீட்டிற்கு போனார்கள். இவ்வாறு பலமுறை போனதுண்டு. அவ்வேளையில்தான் வீட்டு உரிமையாளரால் பிடிக்கப்பட்டனர். இவ்வாறு போனது தவறுதான் என்றாலும் நீங்கள் தெரிவித்ததுபோல் களவு அல்ல.இது பாடசாலையுள் அனைவருக்கும் மற்றும் பாடசாலையுடன் தொடர்புடைய சகல பழைய மாணவர்களுக்கும் தெரிந்த உண்மை. உங்களுக்கு திரித்து கூறப்பட்டதை தீரவிசாரிக்காமல் போட்டது உங்கள் தவறு.

  – கல்லூரியின் ஆண்டு விழா உலகெங்கும் உள்ள சகல பழைய மாணவர் சங்கங்களின் பங்களிப்புடன் வெகு விமரிசையாக நடைபெற்றது. அதற்காக தனி வங்கிக்கணக்கு ஆரம்பிக்கப்பட்டு உப அதிபரின் கீழ் வரவு செலவு முறையாக பேணப்பட்டு விழா முடிந்தவுடன் கணக்காய்வு செய்யப்பட்டு பழைய பழைய மாணவர் சங்ககங்களுக்கு கணக்கறிக்கைகள் அனுப்பபட்டன. அப்போது அடிக்கப்பட்ட ஆண்டுமலர் 500 ரூபாவிற்கு விற்பதாகத்தான் முடிவு செய்யபட்டது. விற்கப்பட்ட பணம் பாடசாலை நிதியினையே சேரும். இதில் என்ன தவறு கண்டீர்கள்.

  – இந்த அதிபர் பதவிற்கு வந்து வெறும் 2 ½ வருடங்களே. பல ஆண்டுகளாக இருந்து வந்த 6ஆம் ஆண்டுக்கு உத்தியோகபூர்வமற்றமுறையில் அனுமதி பணம் பெற்ற நடை முறை இந்த அதிபர் வந்த கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் நிறுத்தப்பட்டுள்ளது. பெறும் பணத்திற்கு பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் உடாக ரசிது வழங்கப்பட்டு கல்வி அமைச்சின் விதிமுறைகளுக்கு அமையவே அனுமதி வழங்கப்பட்டது. லஞ்சம் வாங்கி அனுமதி வழங்கப்பட்டதாக கூறப்படும் ஒரு மாணவனை உங்களால் அடையாளம் காட்ட முடியுமா?

  – விளையாட்டுத்துறைக்கான 40 லட்சம் ரூபா பணம் இங்கிலாந்து பழைய மாணவர் சங்கத்தை சேர்ந்த இரு பழைய மாணவர்களால் வழங்கப்பட்டது. அதுவும் இது கொழும்பு பழைய மாணவர் சங்கத்திடம் வழங்கப்பட்டு அவர்கள்தான் இந்நிதியை பராமரிக்கிறார்கள். பாடசாலைக்கு தேவை ஏற்படும் பொழுது தேவைப்படும் நிதியை கொழும்பு பழைய மாணவர் சங்கத்தினர் வழங்குவர்.

  – நீங்கள் குறிப்பிட்ட ஆசிரியர் தொடர்பான நாம் அறிந்ததாவது, குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட தினம் அதிபர் விடுமுறையில் இருந்ததால் பிரதி அதிபரால் விசாரணை மேற்கொள்ளப்பட்டு பாடசாலை விசாரணை அறிக்கையுடன் கல்வி அமைச்சின் மேற்பார்வைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் நீங்கள் கண்ட தவறு என்ன?

  – இதைத் தவிர ஒரு மூன்றாம் தர மஞ்சள் பதிரிகைபோல் பாலியல் லஞ்சம், பெண்களுடன் தொடர்பு என ஆதாரம் இன்றி குற்றம் சுமத்தியுள்ளிர்கள். இவற்றுக்கான ஒரு ஆதாரம் தர முடியுமா?
  – 30 ஆண்டுகள்ளுக்கு மேலாக கல்வித்துறையில் சிறந்த சேவையாற்றி 9 வருடங்களாக பல சவால்களுடன் இருந்த பாடசாலையை கடந்த 2 வருடத்திற்குள் மாற்றங்கள் பல செய்து மாணவர், பழைய மாணவர், பெற்றோர் மற்றும் நலன் விரும்பிகளின் மதிப்பை பெற்ற ஒரு அதிபரை குறிப்பிட்ட சிலரின் சுயநலத்திற்காகவும் பல வருடங்களாக தாம் செய்த மோசடிகளை தொடரமுடியாத ஒரு சிலரின் பேச்சை கேட்டு அவரையும் அவரின் குடும்பத்தினரிதும் மனம் நோகும் வண்ணம் தான்தோன்றித்தனமாக எழுதுவதுதான் உங்கள் பத்திகை தர்மமா? இதன்மூலம் அதிபர் மட்டுமின்றி அதன் ஆசிரியர், மாணவர்கள், பழைய மாணவர்கள் மற்றும் அவர்கள் தம் கோயிலாக நினைக்கும் கல்லூரி எல்லோரையும் இழிவுபடுத்தி விட்டீர்கள்.
  இங்கு அதிபர் மீது குறிபிட்ட அனைத்து விடயங்களும் பொய்யானவை என குறித்த ஆவணங்களுடன் உங்களுக்கு நிருபிக்கப்படும். இதற்கு மாறாக நீங்கள் எழுதி ஒன்றைத்தனினும் உங்களுக்கு ஆதாரத்துடன் நிருபிக்கமுடியுமா?
  நீங்கள் குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் பாதி உண்மையானாலும் கூட அதிபர் மேல் சட்ட நடவடிக்கை எடுக்கலாமே. ஏன் இன்றுவரை இது தொடர்பாக ஒருவர் கூட சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை?
  ஆகவே மீண்டும் வேண்டுகின்றோம், தனிப்பட்ட சிலரின் சுயநலத்திற்காக தனி மனிதனையோ ஒரு பெருமை மிக்க கல்லுரியினையோ தீரவிசாரிக்காமல் பிழையாக எழுத வேண்டாம். யாரோ ஒருவர் கூறினார் என்றோ யாரோ ஒருவர் மாகாண அமைச்சிற்கு கடிதம் எழுதினார் என்றோ உண்மைகளை சம்பந்த்தப்பட்டவர்களிடம் தெளிவுபடுத்தாமல் இது போன்று சமூக வலைத்தளங்களில் போடாதீர்.
  தங்கள் இணையத்தளம் ஒரு நடு நிலையான இணையத்தளம் என்றால், நீங்கள் ஒரு நடுநிலையான பத்திரிகையாளர் எனில் இந்த மடலையும் உங்கள் இணையத்தில் அப்படியே நிச்சயம் போடுவீர்கள் என்று எதிர்பார்கிறோம்.