இலங்கை

மாகாணசபையில் அங்கம் வகிப்போர் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட வேண்டுமென கோருகின்றனர் – பிரதமர்

மாகாண சபைகளின் அதிகாரங்களை குறைக்க வேண்டும் என ஒரு மாகாண சபை உறுப்பினர் கூறியுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய பிரதமர் எனினும், மாகாண சபைகளின் அதிகாரங்களை மேலும் அதிகரிக்க வேண்டும் என்றே மாகாண சபையில் அங்கம் வகிக்கும் தமிழ் மற்றும் சிங்களவர்கள் கோருகின்றனர் என   தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ், சிங்கள எந்த இனத்தவருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் எனத் தெரிவித்துள்ள அவர்  இனப்பிரச்சினைக்கான தீர்வில் தமக்கு பாதிப்பு ஏற்படுமா என சிங்கள மக்களும் தமக்கான வாழ்வுரிமை பாதிக்கப்படுமா என தமிழ் மக்களும்  யோசிக்கின்றனர் எனவும்  ஆனால் எந்த இனத்தவரையும் பாதிக்காத வகையில் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை; தொடர்ந்தும் மேற்கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.

அதிகாரத்தை பங்கீடு செய்வது குறித்து நாம் சிந்தித்து வருவதுடன், தமிழ் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது குறித்த வேலைத்திட்டம் ஒன்றையும் முன்னெடுத்து வருவதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply