இலங்கை

நுளம்பு ஒழிப்பு சுகாதார சேவை உதவியாளர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டுள்ளது


நுளம்பு ஒழிப்பு சுகாதார சேவை உதவியாளர்களுக்கான நியமனம் வழங்கல் இன்று (18) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெற்றது. டெங்கு ஒழிப்புக்காக நுளம்பு ஒழிப்பு சுகாதார சேவை உதவியாளர்கள் 1500 பேரை இணைத்துக்கொள்வதாக அரசாங்கம் மேற்கொண்ட கொள்கை ரீதியான தீர்மானத்திற்கேற்ப மேல் மாகாண நுளம்பு ஒழிப்புக்காக 500 பேர் முதற்கட்டமாக இணைத்துக் கொள்ளப்பட்டனர்..

சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவினால் இந் நிகழ்வு எற்பாடு செய்யப்பட்டிருந்தது. இரண்டு வார பயிற்சியின் பின்னர் இந்த சுகாதார சேவை உதவியாளர்கள் சேவைக்காக விடுவிக்கப்படவுள்ளதுடன், முதல் 06 மாத காலத்திற்குள் டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பைக் கட்டுப்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

நுளம்பு ஒழிப்புக்காக நிரந்தர ஆளணியொன்றினை நியமித்த 03வது நாடாக இலங்கை வரலாற்றில் இடம்பெறுகிறது. சிங்கப்பூர் மற்றும் கியூபா ஆகிய நாடுகள் முன்னிலையில் உள்ளன.

Add Comment

Click here to post a comment

Leave a Reply