ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன பாராளுமன்ற நிலையியல் கட்டளைகளுக்கு மாறாக செயற்பட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டு சபை அமர்வுகளில் கலந்து கொள்வதற்கு ஒரு வார காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
தினேஷ் குணவர்த்தனவை பாராளுமன்ற அமர்வுகளில் இருந்து ஒரு வார காலம் நீக்கும் தீர்மானத்தினை அவைத் தலைவர் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல முன்மொழிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டு தீர்மானம் 63 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. யோசனைக்கு ஆதரவாக 85 வாக்குகளும், எதிராக 22 வாக்குகளும் வழங்கப்பட்டிருந்தது.
Add Comment