இன்டியன் வேல்ஸ் டென்னிப் போட்டித் தொடரில் சுவிட்சர்லாந்து வீரர் ரொஜர் பெடரர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். இறுதிப் போட்டியில் சக வீரர் ஸ்ரான் வாவ்றின்கா (Stan Wawrinka ) வை 6-4 7-5 என்ற நேர் செற் கணக்கில் வீழ்த்தி பெடரர் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். உலக டென்னிஸ் தர வரிசையில் பத்தாம் நிலை வகிக்கும் பெடரர் சிறந்த திறமைகளை அண்மைக்காலமாக வெளிப்படுத்தி வருகின்றார்.
அண்மையில் நடைபெற்ற அவுஸ்திரேலிய ஓபன் போட்டித் தொடரிலும் பெடரர் வெற்றியீட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டித் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற வயது முதிர்ந்த வீரர் என்ற பெருமையை 35 வயதான பெடரர் பெற்றுக்கொண்டுள்ளார்.
Add Comment