ஜே.என்.பி கட்சியின் தலைவர் விமல் வீரவன்சவின் பிணை மனு மீளவும் நிராகரிக்கப்பட்டுள்ளது. கொழும்பு உயர் நீதிமன்றம் இவ்வாறு பிணை மனுவை நிராகரித்துள்ளது. விமல் வீரவன்சவின் சார்பில் உயர் நீதிமன்றில் இன்றைய தினம் தாக்கல் செய்யப்பட்டிருந்த குறித்த மனுவை பரிசீலனை செய்த நீதிமன்றம், அதனை நிராகரித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 10ம் திகதி விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசாங்க சொத்துக்களை துஸ்பிரயோகம் செய்தார் என விமல் வீரவன்ச மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Add Comment