இலங்கை பிரதான செய்திகள்

சற்றுமுன் கிளிநொச்சிப் போராட்டத்தில் பதற்றம் – காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளையின் நினைவு வரும் போதெல்லைம் மயக்கமடையும் தாய்:-

கடந்த 20-02-2017 அன்று காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை முப்பதாவது நாளாக தீர்வின்றி தொடர்கிற நிலையில்

போராட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தாயொருவர் மயக்கமடைந்து வீழ்ந்தமையால் அங்கு பதற்ற நிலை நிலவியது பின்னர் வடமாகாண நோயாளர் காவுவண்டி நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டதனை அடுத்து சில நிமிடங்களில் கிளிநொச்சி பொதுவைத்தியசாலை நோயாளர் காவுவண்டி மூலம் குறித்த தாயார் வைத்தியசாலைக்கு அனுப்பப் பட்டுள்ளார்

இந்தத் தாயார் காணாமல் ஆக்கப்பட்ட தனது பிள்ளையின் நினைவுகள் வரும்போதெல்லாம் இவ்வாறு மயக்கமடைபவர் என்பதுடன் இதற்காக பிரத்தியேக வைத்தியர் மூலம் சிகிச்சை பெற்றுவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers