விளையாட்டு

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பாகிஸ்தான் வீரர்கள் நாட்டை விட்டு செல்ல தடை

பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியின்போது கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 வீரர்களுக்கு  நாட்டை விட்டு செல்ல பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் நிசார் அலிகான் தடை விதித்துள்ளார்.  பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியின்போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்ட பாகிஸ்தான் வீரர்;களான ஷர்ஜில்கான், காலித் லத்தீப், முகமது இர்பான், நாசிர் ஜாம்ஷெட், ஷாசாயிப் ஹசன் ஆகியோர்  மீது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்து  தடைசெய்துள்ள நிலையில் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த கிரிக்கெட்ட சூதாட்டம் தொடர்பாக சர்வதேச புலனாய்வு அமைப்பும் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply