தென் ஆபிரிக்க நட்சத்திர கிரிக்கட் வீரர் குயின்டன் டிகொக் (Quinton de Kock) உபாதையினால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரின் சுட்டு விரலில் உபாதை ஏற்பட்டுள்ளதாகவும் உபாதை குணமடைவதற்கு நான்கு முதல் ஆறு வார காலம் தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஹமில்டனில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டிகொக் சில வேளைகளில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும், அடுத்த மாதம் ஆரம்பமாக உள்ள இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரில் டிகொக் பங்கேற்கக்கூடிய சாத்தியமில்லை என தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே தென் ஆபிரிக்க வீரர் ஜே.பி டுமினி இந்தியன் பிரிமியர் லீக் போட்டித் தொடரிலிருந்து விலகி;கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment