இலங்கை பிரதான செய்திகள்

நியூசிலாந்து இலங்கையில் உயர்ஸ்;தானிகராலயம் ஒன்றை திறக்க உள்ளது


நியூசிலாந்து இலங்கையில் உயர்ஸ்தானிகராலயமொன்றை திறக்க உள்ளது. நியூசிலாந்தின் வெளிவிவகார அமைச்சர் முரே மக்குலி ( Murray McCully )இதனை அறிவித்துள்ளார். கொழும்பில் உயர்ஸ்தானிகராலயமொன்றை அமைப்பது இரு நாடுகளுக்கும் இடையிலான வலுவான உறவுகளின் ஓர் அடையாளமாக கருதப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

சில தசாப்தங்களாக இலங்கையில் யுத்தம் இடம்பெற்று வந்ததாகவும் , தற்போது நாட்டை மீளக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ள அவர் இலங்கையுடன் சிறந்த உறவுகள் காணப்படுவதாகவும் மேலும் உறவுகளை விருத்தி செய்து கொள்ள முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.