முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பாரிய ஊழல் மோசடி குறித்து விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையாகியுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தில் தேசிய தொலைக்காட்சியில் விளம்பரம் மேற்கொண்டமைக்கான பணம் செலுத்தாமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழ்குவதற்காகவே அவர் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக கடந்த கடந்த வாரம் அழைக்கப்பட்டிருந்த மகிந்த தவிர்க்க முடியாத காரணங்களால் அத்தினத்தில் முன்னிலையாக முடியாது என தெரிவித்திருந்தமையினால் விசாரணை இன்றைய தினத்திற்கு மாற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Add Comment