ஐந்து நைஜீரிய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோதமான முறையில் நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிய வீசா இன்றி இவர்கள் தங்கியிருந்தமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதனைத் தொடர்ந்து நீர்கொழும்பு கொச்சிகக்கடை பகுதியில் வைத்து நேற்று இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலை செய்யப்பட்டதன் பின்னர் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 6ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Spread the love
Add Comment