ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கு அளித்த வாக்குறுதிகளை இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமென பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது. இதனைத் தெரிவித்துள்ள பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய அமைச்சர் Baroness Joyce Anelay இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்த சில முக்கிய விடயங்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறெனினும், யுத்தம் காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்கள் தொடர்பில் இன்னும் பல்வேறு கருமங்கள் ஆற்றப்பட வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ள அவர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
Spread the love
Add Comment