விளையாட்டு

இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் பங்களாதேஷ் அபார வெற்றி


இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டியில் பங்களாதேஷ் அணி 90 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியுள்ளது. நேற்று இடம்பெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி, முதலில் துடுப்பாடிய பங்களாதேஷ் அணி, ஐம்பது ஓவர்கள் நிறைவில் ஐந்து விக்கட்டுக்களை இழந்து 324 ஓட்டங்களை பெற்றது. இதில் தமீம் இக்பால் 127 ஓட்டங்களையும் சகிபுல் ஹசன் 72 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டார். பதிலளித்தாடிய இலங்கை அணி 45.1 ஓவர் நிறைவில், சகல விக்கட்டுக்களையும் இழந்து 234 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.  இதன்படி மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் பங்களாதேஷ் அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கின்றது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply