இந்தியா

குஜராத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட சிறிய தகராறு மதச்சண்டையாக மாறியதில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர்


இந்தியாவின் குஜராத்தில் மாணவர்களிடையே ஏற்பட்ட சிறிய தகராறு மதச்சண்டையாக மாறியதில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 50 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீவைக்கப்பட்டுமுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

கிராமம் ஒன்றில்  10-ஆம் வகுப்பு மாணவர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதமானது  சுற்றியுள்ள 3 கிராமங்களுக்கு பரவி மதக்கலவரமாக வெடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.  இதனைத் தொடர்ந்து வீடுகளுக்கும் வாகனங்களுக்கும்  தீவைக்கப்பட்டதாகவும்  நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர காவல்துறையினர்  கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியதுடன்  ஒரு கட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய நிலையும் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவங்களில் 2 பேர் கொல்லப்பட்டதுடன் 10 பேர் காயமடைந்ததாகவும்  இதனால் அங்கு பதற்றம் நிலவி வருகின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.