இலங்கை பிரதான செய்திகள்

அரசியல் சாசனத்திற்கு அமைய வெளிநாட்டு நீதவான்கள் விசாரணைகளில் ஈடுபட முடியாது என்பது பொய் – நிரான் அன்கேற்றல்

தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்


இலங்கையின் அரசியல் சாசனத்திற்கு அமைய வெளிநாட்டு நீதவான்கள் விசாரணைகளில் ஈடுபட முடியாது என்பது பொய்யான கருத்து என தெற்காசிய சட்ட கல்வி மையத்தின் இணை ஸ்தாபகரும், சட்டத்தரணியுமான நிரான் அன்கேற்றல் ( Niran Anketell ) தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசியல் சாசனத்தில் நீதவான்களின் இனம் பற்றி எவ்வித விபரங்களும் சுட்டிக்காட்டப்படவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ள வேண்டும் என்பதே முக்கியமானது என  குறிப்பிட்டுள்ளார். சத்தியப் பிரமாணத்தில் அரசியல் சாசனத்தை பாதுகாத்து பேணுவதாகவே உறுதியளிக்க வேண்டியுள்ளது எனவும்  அமெரிக்காவை போன்று இலங்கையில் சத்தியப் பிரமாணம் செய்யப்படுவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சத்தியப் பிரமாணத்தின் ஆறாம் சரத்தில் பிரிவிணைவாதத்தை தடுக்கும் வகையிலான விடயங்கள் காணப்படுவதாகவும், பிரதான சத்தியப் பிரமாணத்தில் அரசியல் சாசனத்தினை பாதுகாப்பது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள அவர் இவ்வாறான ஓர் பின்னணியில் வெளிநாட்டு பிரஜை ஒருவர் ஏன் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ள முடியாது என தமக்கு புரியவில்லை அவர் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்துள்ள செவ்வியில் அவர் இந்த விடயம் பற்றி சுட்டிக்காட்டியுள்ளார்.

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், செனல்4 தொலைக்காட்சியின் தயாரிப்பாளர் கலம் மெக்ரே போன்றவர்கள் இவ்வாறு வெளிநாட்டு நீதவான்களை உள்ளடக்கிய விசாரணையை கலப்பு நீதிமன்றமாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், அரசியல் சாசனத்தின் அடிப்படையில் வெளிநாட்டு நீதவான்களை உள்ளடக்க முடியாது எனவும் கூறி வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவிடயத்தையே இலங்கை அரசாங்கமும், வெளிநாட்டு நீதவான்களை விசாரணைகளில் பங்கேற்கச் செய்ய முடியாது என்ற தமது வாதத்தை நியாயப்படுத்தி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply




Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other subscribers