உலகம்

ரஸ்யாவில் பிரதமருக்கெதிராக போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி தலைவர் உட்பட்டோர் கைது

ரஸ்யாவில்  பிரதமர்   டிமிட்ரி மெத்வதேவ்வை பதவி விலகக் கோரி மொஸ்கோவில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சி தலைவர் அலெக்சிநவால்னி உட்பட 800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதமருக்கெதிராக  போராட்டம் மேற்கொள்ள ரஸ்யா முழுவதும் 99 நகரங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட  போதும் 17 இடங்களுக்கு மட்டுமே அனுமதி கிடைத்தது.

எதிர்க்கட்சி தலைவர் அலெக்சிநவால்னி  தலைமையில் இடம்பெற்ற போராட்டங்களில் ஏராளமானோர் கலந்து கொண்டநிலையில்  காவல்துறையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.  இந்தநிலையில்  எதிர்க்கட்சி தலைவர் அலெக்சிநவால்னி உட்பட பல போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எதிர்வரும்  2018-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில்  அலெக்சிநவால்னி தற்போதைய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை  எதிர்த்து போட்டியிடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply