சண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை குறித்த விபரங்களை மூடி மறைத்த முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்கேகாவை கைது செய்ய வேண்டுமென பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில கோரியுள்ளார். கொழும்பில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சட்டத்தை வளைக்காது சட்டம் அனைவருக்கும் ஒரேவிதமாக அமுல்படுத்தப்பட வேண்டுமென கோரியுள்ள அவர் லசந்த கொலை குறித்த தகவல்கள் தெரிந்திருந்தும் அவற்றை சரத் பொன்சேகா மூடி மறைத்துள்ளார் என குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் அனுர சேனாநாயக்க, கொலைச் சம்பவம் குறித்த விபரங்களை மூடி மறைத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு ஓராண்டுக்கு மேல் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இதேவிதமான சட்டம் சரத் பொன்சேகாவிற்கும் அமுல்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் கோரியுள்ளார்.
Add Comment