விளையாட்டு

மெஸ்சிக்கு உலகக் கோப்பை தகுதிச்சுற்றின் 4 போட்டிகளில் விளையாட தடையும் 10 ஆயிரம் டொலர் அபராதமும்


பார்சிலோனா மற்றும் ஆர்ஜென்ரீனா கால்பந்து அணியின் முன்னணி வீரர் லயனல் மெஸ்சிக்கு உலகக் கோப்பை தகுதிச்சுற்றின் 4 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. நடுவரை அவமதிக்கும் வகையில் பேசியதற்காகவே அவருக்கு இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

மெஸ்சி தற்போது ஆர்ஜென்ரீனா அணிக்காக உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டங்களில் விளையாடி வருகின்ற நிலையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற தகுதிச்சுற்று ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி, 1-0 என்ற கோல்கணக்கில் சிலி அணியை வென்றது.

இப்போட்டியின்போது துணை நடுவர், மெஸ்சிக்கு எதிராக தீர்ப்பு கூறியதும் அவரைநோக்கி கைகளை ஆட்டியபடி கத்தியமை நடுவரை அவமதிக்கும் செயல் என்பதால் விசாரணா நடத்திய பிபா ஒழுங்குமுறை ஆணையம்  மெஸ்சிக்கு 4 சர்வதேச போட்டிகளில் விளையாட தடை விதித்து உத்தரவிட்டுள்ளதுடன் 10 ஆயிரம் டொலர் அபராதமும் விதித்துள்ளது.

தடையை எதிர்த்து மெஸ்சியும் அர்ஜென்டினா கால்பந்து சங்கமும் முறையீடு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.