இலங்கை பிரதான செய்திகள்

கீத் நொயாரை கடத்த பயன்படுத்திய வெள்ளை வான் மீட்பு


பிரபல ஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்துவதற்கு பயன்படுத்திய வெள்ளை வான் என சந்தேககிக்கப்படும் வாகனம் மீட்கப்பட்டுள்ளது. பிலியந்தலை பிரதேசத்தில் வைத்து இந்த வான்  மீட்கப்பட்டுள்ளது. இந்த கடத்தல் மற்றும் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வுப் பிரிவு அதிகாரி மேஜர் புலவத்தவிற்கு நெருக்கமான பெண் ஒருவரின் வீட்டிலிருந்து இந்த வான் மீட்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வு பிரிவினரால்  நேற்று மீட்கப்பட்டுள்ள இந்த வாகனம் கீத் நொயார் தாக்குதலுக்கு மட்டுமன்றில் லசந்த கொலை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இராணுவ புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரியொருவர் உள்ளிட்ட ஐந்து உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.