இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ள இந்திய மீன்பிடிப் படகுகள் எதுவும் விடுவிக்கப்படவில்லை என என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
2015ம் ஆண்டின் பின்னர் கைப்பற்றப்பட்ட எந்தவொரு இந்திய மீன்பிடிப் படகும் இதுவரையில் விடுவிக்கப்படவில்லை என தெரிவித்துள்ள அவர் 2015ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு முன்னதாக கைப்பற்றப்பட்ட மீன்பிடிப் படகுகளை அப்போதைய அரசாங்கம் விடுவித்திருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய மீனவர்களின் 130 படகுகள் இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
Add Comment