அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் மருமகன் சீனாவுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்திக் கொள்வதில் நாட்டம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ட்ராம்பின் மருமகன் ஜார்ட் குஷ்னர் (Jared Kushner) அண்மையில் சீனாவிற்கு சென்றிருந்த நிலையில் நியூயோர்க் நகரின் பாரிய அபிவிருத்தித் திட்டமொன்று தொடர்பில் சீன நிறுவனத்துடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
ட்ராம்ப் சீனாவுடன் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் கருத்து வெளியிட்டு வரும் நிலையில் அவரது மருமகன், சீனாவுடன் வர்த்த உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள மேற்கொள்ளும் முயற்சி விமர்சனங்களை சந்தித்துள்ளன.
Add Comment