Home இந்தியா தமிழகத்தில் புகையிரத மறியல் போராட்டம் நடக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது-

தமிழகத்தில் புகையிரத மறியல் போராட்டம் நடக்க வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது-

by admin


ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல் தமிழகத்தில் புகையிரத மறியல் போராட்டம் நடக்க வாய்ப்புள்ளதாக தமிழக புகையிரத காவல்துறையினருக்கு ‘கியூ’ பிரிவு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை நடத்தக்கோரி தமிழக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தியிருந்தனர். இதேபோன்று விவசாய கடனை தள்ளுபடி செய்யக் கோரி டெல்லியில் தமிழக விவசாயிகள் கடந்த சில நாட்களாக போராடி வருகின்ற நிலையில் அவர்களுக்கு ஆதரவாக இந்திய இளைஞர் கூட்டமைப்பினர் புகையிரத மறியல் போராட்டத்தில் ஈடுபட வாய்ப்புள்ளது என ‘கியூ’ பிரிவு காவல்துறையினர் தமிழக புகையிரத காவல்துறையினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த எச்சரிக்கையை அடுத்து சென்னையில் உள்ள முக்கிய புகையிரத நிலையங்களான மத்திய மற்றும் எழும்பூர் புகையிரத நிலையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் புகையிரத நிலையத்திற்குள் வரும் அனைத்து பயணிகளும் பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More