ஓபிஎஸ் தலைமையில் மீண்டும் அதிமுக ஒன்றிணைந்து இரட்டை இலையை பெற்றிடுவோம் என்று ஓபிஎஸ் அணியின் செய்தித் தொடர்பாளர் கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு தொடர்பான நீதி விசாரணை வெற்றி பெற்ற ஒருவாரத்தில் அமைக்கப்படும் எனவும் ஜெயலலிதாவின் இல்லம் புனித நினைவு இல்லமாக மாற்றப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் இந்தியாவிலேயே முதல் முறையாக நடமாடும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் இங்கு கொண்டுவரப்படுகிறது எனவும் மக்களை தேடி நட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில். வெற்றி பெற்ற 100 நாட்களில் இந்த சேவை தொடங்கப்படும் எனவும் அதன் படி ஒரு வாகனம் தினசரி தொகுதி முழுவதும் சுற்றி வரும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அதில் மனுக்கள் பெறுதல், அரசு திட்டங்கள் விழிப்புணர்வு, இ-சேவை மையம், ‘மை ஆர்.கே.நகர்’ எனும் செல்பேசி செயலியை நடைமுறைப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுமெனவும் அந்த வாகனத்திலேயே பொதுமக்கள் தங்கள் குறையை தெரிவித்தால் அதை பதிவு செய்து சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பி நிறைவேற்றப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
Add Comment