இலங்கை பிரதான செய்திகள்

31ஆவது நாளாகவும் தொடரும் கேப்பாபுலவு மக்களின் போராட்டம் :

தமது பூர்வீக நிலத்தை மீட்க வலியுறுத்தி 31ஆவது நாளாகவும் கவன ஈர்ப்புப் போராட்டத்தில் முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள ; ஈடுபட்டுள்ளனர். கேப்பாபுலவில் அமைத்துள்ள முல்லைத்தீவு இராணுவத் தலைமையகத்துக்கு முன்பாக தொடர் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.  இந்த நிலையில் கேப்பாபுலவு பிரதேசத்தில் விடுவிக்கப்படாத 482 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு கேப்பாப்புலவு பூர்வீக கிராம மக்கள் 31ஆவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள இராணுவத்தினர் அதனை விடுவிக்கவேண்டுமெனக்கோரியே இப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இராணுவத்தின் தொடர் கண்காணிப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் என்று பலதரப்பட்டவர்களும் பல்வேறு சிரமங்களின் மத்தியில் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இராணுவத்தின் நில ஆக்கிரமிப்புக்கு எதிரான குரல்களை வலுவாக இந்த மக்கள் எழுப்புகின்றனர். அத்துடன் சிறுவர்கள் இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராகவும் தமது கிராமம் பற்றியும் பாடல்களை பாடி போராடுகின்றனர்.
128 குடும்பங்களிற்கு சொந்தமான 482 ஏக்கருக்கு அதிகமான காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

கேப்பாப்புலவு கிராம சேவகர் பிரிவில் கேப்பாப்புலவு பூர்வீக கிராமம், சீனியா மோட்டை, பிலக்குடியிருப்பு, சூரிபுரம் போன்ற கிராமங்கள் காணப்படுகின்ற நிலையில் இதில் அனைத்து கிராமங்களிலும் இராணுவம் நிலைகொண்டுள்ளனர்.

இந்த நிலையில் கேப்பாப்புலவு பூர்வீக கிராமத்தில் பிரதான வீதியை மறித்து குடியிருப்பு காணிகள், வீடுகள், பாடசாலை, வணக்கஸ்தலங்கள், விளையாட்டு மைதானங்கள், தோட்ட நிலங்கள், வயல் நிலங்கள் என அனைத்தையயும் கையகப்படுத்தி 10 இற்கும் மேற்பட்ட இராணுவத்தின் பிரதான படைப்பிரிவுகளை அமைத்து பல இராணுவ முகாம்களை இராணுவம் அமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.