இலங்கை

கூட்டு எதிர்க்கட்சிக்கு காலி முகத் திடலை வழக்குமாறு பிரதமர் பணிப்புரை


மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினரின் மேதின நிகழ்வை காலிமுகத்திடலில் நடத்த அனுமதிக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் பொதுமக்கள் குறித்த நிகழ்வுக்கு இலகுவாக செல்லக்கூடிய வாய்ப்பையும் பெற்றுக்கொடுக்குமாறும் இந்த நிகழ்வுக்கு உரிய பாதுகாப்பை வழங்குமாறும் காவல்துறைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சியினருடன் கலந்துரையாடுமாறும் ரணில் விக்கிரமசிங்க காவல்துறையிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply