இலங்கை பிரதான செய்திகள்

சோழர் காலத்தைப்போல இப்போது ஒரு விகாரையை அமைக்க முடியாதுள்ளது! மஹிந்த ராஜ­பக்ஷ:-

சோழ மன்­னர்கள் இலங்­கையை ஆக்­கி­ர­மித்த கால­கட்­டத்தில் பௌத்த தர்­மத்தை அழிக்க முனைந்­தனர். அதைப்போலவே இன்று ஒரு விகாரையையோ, புத்தர் சிலையையோ அமைக்க முடியவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

காரணம்  அதற்கு சீமெந்து எங்­கி­ருந்து கிடைத்­தது என விசா­ரிக்கும் ஆட்­சி­யா­ளர்கள் நாட்டில் உள்­ளனர். இவர்­களும் தர்­மத்­திற்கு எதி­ரா­கவே செயற்­ப­டு­கி­றார்கள் என்றும் மஹிந்த ராஜபக் ஷ  கூறி­யுள்ளார்.

இப்போது ஒரு விகாரையை அமைத்தால், சீமெந்து எங்­கி­ருந்து கிடைத்­தது என ரக­சிய பொலிஸார் விசா­ரிக்கும் நிலை ஏற்­பட்­டுள்­ள என்று தெரிவித்துள்ள அவர் அர­சாங்­கமே இதனை மேற்­கொள்­கின்றது என்றும் குற்றம் சுமத்தினார்.

அர­சி­யல்­வா­தி­களை அடக்கு முறைக்கு உள்­ளாக்கலாம் எனக் கூறிய அவர்,  மதத்­தையும் தர்­மத்­தையும் விஹா­ரை­யையும் அடக்கு முறைக்கு உள்­ளாக்க முடி­யாது என்றார். அவ்­வாறு அடக்கு முறைக்கு உள்­ளாக்க முனைந்தால் அதற்கு இட­ம­ளிக்க மாட்டோம் என்றும் குறிப்பிட்டார்.அண்­மையில் அரச மர­மொன்றை வெட்­டி ­சாய்க்க முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன என்று குறிப்பிட்டுள்ள மகிந்த ராஜபக்ச  அதனை வழி­படுவோரின் எதிர்ப்பால் அம்­மு­யற்சி கைவி­டப்­பட்­டதாகவும் தெரிவித்தார்.

சோழ மன்­னர்கள் இலங்­கையை ஆக்­கி­ர­மித்த காலத்தில் பௌத்த தர்­மத்தை அழிக்க முனைந்­தனர். ஆனால் எம்­ம­வர்கள் தர்­மத்தை பாது­காத்­துள்­ளனர்.எமது பிள்­ளைகள் நல்ல வழியில் வாழ வேண்டும். அதற்கு எமது தர்மம் பாது­காக்­கப்­பட வேண்டும் என்றும் மேலும் குறிப்பிட்டார்.

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.