இலக்கியம் இலங்கை

படுகொலை செய்யப்பட்ட எஸ்போஸின் படைப்புகள் மற்றும் அவர் பற்றிய நூல் வெளியிடப்பட்டது

படுகொலை செய்யப்பட்ட சந்திரபோஸ் சுதாகர் என்ற எஸ்போஸின் படைப்புக்கள் மற்றும் அவரது படைப்புகள் பற்றியுதும் அவர் பற்றியதுமான நூல் வெளியீடு  இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.02-04-2017  பிற்பகல் மூன்று மணிக்கு கிளிநொச்சி பழைய வைத்தியசாலை மண்டபத்தில் இடம்பெற்ற எழுத்தாளரும் அதிபருமான பெ. கணேசன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
எஸ்போஸ் 2007 ஆம் ஆண்டு வவுனியால் வைத்து  ஆயுததாரிகளால் அவரது எட்டு வயது மகனுக்கு முன்னாள் சுட்டுபடுகொலை செய்யப்பட்டார்.நிகழ்வில் முதல் பிரதியை யாழ் போதான வைத்தியசாலையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி வெளியிட்டு வைக்க எஸ்போஸின் தாயார்  பெற்றுக்கொண்டார். தொடர்ந்து ஓய்வுப்பெற்ற கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் க.முருகவேல் அவர்கள் நூலின் பிரதிகளை வெளியிட்டு வைத்தார்.
எஸ்போஸ் பற்றியும் அவரது படைப்புக்கள் மற்றும்  அவரின் செயற்பாடுகள் பற்றியும் கவிஞர்களான பொன் காந்தன், அநாமிகன், தடே. கிஸ்காட், திருநகர் ஜெகா,நிரஞ்சலன்,ஊடகவியலாளர்  கிருஸ்ணகுமார், ஆசிரியர் தயாளன்   கிருஸாந்தன் ஆகியோர் நிகழ்த்தினார்கள்.நூலினை கவிஞர் கருணாகரன், தயாளன்,சித்தாந்தன் தொகுதி வடலி வெளியீடாக  வெளியிடப்பட்டிருந்தது
ஊடகவியலாளர் சந்திரபோஸ் சுதாகரின் நூலின் வெளியீடு
Apr 2, 2017 @ 03:26

கவிஞர் எஸ்போஸ் என்றழைக்கப்படும் சந்திரபோஸ் சுதாகரின் நூலின் வெளியீடும் அதைத் தொடந்த உரையாடலும் இன்று ஞாயிற்றுக்கிழமை 02.04.2017  பிற்பகல் 3.00 மணிக்கு கிளிநொச்சி பழைய மருத்துவமனை வளாக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ஊடகவியலாளராகவும் படைப்பாளியாகவும் இயங்கிய எஸ்போஸ் 2007 ஆம் ஆண்டு வவுனியாவில் உள்ள அவருடைய வீட்டில் வைத்து, அவருடைய ஏழு வயது மகனின் முன்னே இனங்காட்டத் தைரியமற்றவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அவருடைய ஆவணங்கள், படைப்புகள், ஒளிப்படங்கள் என அனைத்தையும் கொலையாளிகள் எடுத்துச் சென்றிருந்தனர். மிஞ்சிய படைப்புகளையும் பிற இடங்களில் ஏற்கனவே பிரசுரமாகியிருந்த படைப்புகளையும்  தயாளன், சித்தாந்தன், கருணாகரன் ஆகியோர் தேடித் தொகுத்திருக்கின்றனர்.
இதேவேளை இந்த நூலில் எஸ்போஸ் பற்றி பல்வேறு ஆளுமைகள் எழுதியிருக்கும் பதிவுகளும் விமர்சனங்களும் இடம்பெற்றிருக்கின்றன.இந்த நூலினை வடலி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
இதனுடைய வெளியீட்டு நிகழ்வு நாளை கிளிநொச்சியில் பெ. கணேசன் தலைமையில் நடைபெறுகிறது. தொடக்க உரையை ப. தயாளன் ஆற்றுகிறார். இந்த நிகழ்வில் எஸ்போஸின் தாயார் மற்றும் சகோதரர், சகோதரி ஆகியோர் கலந்து கொள்கின்றனர். நூல் பற்றிய விமர்சன உரையை கிரிஷாந் நிகழ்த்துகிறார்.எஸ்போஸ் பற்றிய உரைகளை நிரஞ்சலன், திருநகரூர் ஜெகா, ஜோயல் பியசீலன், பொன் காந்தன், ரகுநாதன், அன்ரன் அன்பழகன் ஆகியோர் ஆற்றுகின்றனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.