இலங்கை பிரதான செய்திகள்

கிளிநொச்சி தேசிய நுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது

தேசிய நுளம்பு க்கட்டுப்பாட்டு வாரத்தின்  ஜந்தாம் நாளான இன்று  02-04-2017 கிளிநொச்சி மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில்  சிரமதானம் மூலம் நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

சிரமதானதினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு  இதன்போதுகரைச்சிப் பிரதேசத்தில் கிளிநொச்சிபொதுச் சந்தை,கிளிநொச்சிபுகையிரதநிலையம்; பூனகரிப் பிரதேசத்தில் முழங்காவில் நகரம் (பிள்ளையார் கோவிலடி),பூனகரிநகரம் (வாடியடி)பளைப் பிரதேசத்தில் அனைத்துஆரம்பசுகாதாரநிலையங்கள் கண்டாவளைப் பிரதேசத்தில்விசுவமடுநகர்ப்பகுதி,கல்மடுநகர் பத்துஏக்கர் சந்தி (கிருபாகடையடி) மற்றும் பரந்தன் நகரம் ஆகியபகுதிகளில் சிரமதானநிகழ்வுகள் அந்தப் பகுதிபொதுச்சுகாதாரக் குழுக்களினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.  மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நேற்றைய நான்காம் நாள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகள்,கல்விநிறுவனங்கள், அரசநிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கட்டுமாணப் பகுதிகள், மதவழிபாட்டு இடங்கள் மற்றும் பொது இடங்கள் ஆகிய 4148 இடங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 1128  இடங்களில் நுளம்புகள் வளருவதற்கு ஏதுவான வாழ்விடங்கள் காணப்பட்டதுடன் 82 இடங்களில் டெங்கு நுளம்பின் குடம்பிகள் காணப்பட்டன.

மேற்படி1128 இடங்களில் 980 இடங்கள் சுத்திகரிக்கப்பட்டதுடன் 196 இடங்களுக்குஎச்சரிக்கைஅறிவித்தல் கொடுக்கப்பட்டது.

என மாவட்ட பொது சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர். அத்தோடு  நான்காம் நாள்  தேசியநுளம்பு கட்டுப்பாட்டு வாரத்தின் நடவடிக்கைகளுக்கு உள்ளுராட்சி உதவி ஆணையாளர் பிரபாகரன் ஒழுங்கமைப்பில் மாவட்டத்தின் பிரதேச மூன்று  பிரதேச சபைகளும் தங்களது முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தார்கள்

Add Comment

Click here to post a comment

Leave a Reply
Subscribe to Blog via Email

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 13 other subscribers