இந்தியா

இடைத் தேர்தல் நடைபெறும் ஆர்.கே. நகருக்குள் அரச வாகனம் நுழையக் கூடாது – தேர்தல் ஆணையம்


இடைத் தேர்தல் நடைபெறும் ஆர்.கே. நகருக்குள் எந்த அரச வாகனமும் நுழையக் கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 12ம்திகதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அங்கு தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் உள்ளன.

இந்நிலையில் அந்த தொகுதியில் பயணக் கொடுப்பனவுகள்  நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில்  குறித்த  தொகுதிக்கு 5 மேற்பார்வையாளர்களை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.  மேலும் பிரச்சாரத்துக்கு மாநில அரசின் வாகனங்களை உபயோகிக்கக் கூடாது எனவும், உதவி தேர்தல் அதிகாரி தரத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளும் மாற்றப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்ட  தேர்தல் ஆணையம் கூடுதல் காவல் ஆணையர் மற்றும் ஆர்.கே.நகருக்கு உட்பட்ட காவல் ஆய்வாளர்களும் மாற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

அத்துடன் ஒடுக்கமான பாரதகளில்; இருசக்கர வாகனத்தில் நுண்பார்வையாளர்கள் ரோந்து மேற்கொள்வார்கள் எனவும்  ஆர்.கே.நகரின் அனைத்து தெருக்களிலும் சிசிடிவி கமராக்கள் பொருத்தப்படும் என்பதுடன்  வாக்குப் பதிவு நாளில் வாக்குச் சாவடிகளில் மத்திய பாதுகாப்பு படை பாதுகாப்பில் ஈடுபடும் எனவும் தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply