ஈராக்கின் மொசூல் நகருக்கு அருகே மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட ஐஎஸ் தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவின் எல்லைப் பகுதியில் இருந்து ஈராக் பகுதிக்குள் ஊடுருவும் ஐஎஸ் தீவிரவாதிகள் வன்முறையில் ஈடுபட்டு வருவதனையடுத்து ஈராக் விமானப் படையினர் மொசூல் நகருக்கு வெளியில் 3 இடங்களில் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகவும் இந்நடவடிக்கையின் போது 150 முதல் 200 வரையான தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஈராக் அரசாங்கம் தெரிவித்துள்ளது. மொசூல் நகரின் மேற்குப் பகுதியை தீவிரவாதிகளிமிருந்து மீட்க தொடர்ந்து அங்கு மோதல்கள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Spread the love
Add Comment