ஊழல் மோசடிகளுக்கு எதிராக போராட்டம் நடத்திய 30 பேர் மொஸ்கோவில் கைது செய்யப்பட்டுள்ளனர். மொஸ்கோ பொலிஸார் குறித்த போராட்டக்காரர்களை கைது செய்துள்ளனர். மொஸ்கோவின் கிரம்லீனில் பேரணியாக செல்ல முயற்சித்தவர்கள் இவ்வாறு தடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுச் சட்டத்தை மீறியதாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
Add Comment