இந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் வர்த்தகர்களிடம் கப்பம் கோருவதற்கு இடமளிக்கப்படாது என அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் சிலர் புறக்கோட்டை வர்த்தகர்களிடமிருந்து கப்பம் பெற்றுக்கொண்டிருந்தனர் என குறிப்பிட்டுள்ள அவர் நல்லாட்சி அரசாங்க ஆட்சியில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாது என அவர் உறுதியளித்துள்ளார்.
மேலும் வர்த்தகர்களே இந்த நாட்டின் பொருளாதாரத்தின் மிக முக்கியமான பங்காளிகள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Add Comment