இந்தியா

டிடிவி தினகரனின் ஆதரவாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை

அதிமுக (அம்மா) கட்சியின் ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளர்  தினகரன் ஆதரவாளர் வீட்டில் நேற்று முன்தினம் இரவு வருமான வரித்துறையினர் திடீரென சோதனை நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது.சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு  பணம் வழங்கப்படுவதாக அதிமுக (அம்மா) கட்சி வேட்பாளர் தினகரன் தரப்பு மீது திமுகவினரும் அதிமுக புரட்சித்தலைவி அம்மா கட்சியினரும் தேர்தல் ஆணையத்தில் முறைப்பாடு அளித்துள்ளனர்.
தேர்தல் ஆணையம் பார்வையாளர்கள் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. மற்றொரு புறம் ஆர்.கே.நகர் தொகுதியில் பணியாற்றிய காவல்இ வருவாய்இ உள்ளாட்சித் துறை அதிகாரிகளை .டமாமாற்றி வருகிறது. இதுதவிர வருமானவரித் துறையினரும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, தண்டையார் பேட்டையில் உள்ள தினகரன் ஆதரவாளர் வீட்டில் வருமான வரித் துறையினர் நேற்று முன்தினம் இரவு திடீரென சோதனை நடத்தினர்.அதிகாலை 2 மணி வரை நடந்த சோதனையில்இ பணம் எதுவும் கைப்பற்றப்படவில்லை. சோதனையில் சிக்கிய மற்ற பொருட்கள், ஆவணங்கள் தொடர்பான தகவல் எதனையும் வருமான வரித்துறையினர் வெளியிடவில்லை.

Add Comment

Click here to post a comment

Leave a Reply