இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் மற்றும் கிரிக்கட் கட்டுப்பாட்டுச்சபை அதிகாரிகள் நேற்றையதினம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவைச் சந்தித்தித்துள்ளனர். குறித்த சந்திப்பின் போது கிரிக்கட் விளையாட்டின் மேம்பாட்டுக்கு முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாகத் ஜனாதிபதி தெரிவித்ததாக ஜனாதிபதி செயலக ஊடகக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்திப்பில் ஆசிய கிரிக்கட் சம்மேளனத்தின் தலைவர் சஹர்யார் எம் கான், பங்களாதேஷ் கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தலைவர் அமைச்சர் நஸ்முல் ஹசன், நிறைவேற்று அதிகாரி நிஜாமுத்தீன் சௌத்திரீ ஆகியோரும் சிரேஷ்ட கிரிக்கட் வீரர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
Add Comment