இலங்கை பிரதான செய்திகள்

தீர்ப்பு எழுதுவது முக்கியமில்லை

தீர்ப்பு எழுதுவது முக்கியமில்லை அதனை நடைமுறைப்படுத்தவும் வேண்டும் என யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
ஊர்காவற்துறை பகுதிக்கு தேர்தல் பிரச்சாரம் செய்ய சென்றவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு இருவரை படுகொலை செய்த குற்றவாளிகள் இருவர் இலங்கையில் இருந்து தப்பி சென்று இங்கிலாந்து நாட்டில் தலைமறைவாக உள்ளனர்.
அவர்கள் இருவரையும் நாடு கடத்தப்பட வேண்டும். ஒரு நாட்டில் குற்றவாளியாக காணப்பட்ட ஒருவர் பிறிதொரு நாட்டில் வசித்தால் அவரை நாடு கடத்தப்பட வேண்டும் என நாடுகளுக்கு இடையில் ஒப்பந்தம் உள்ளது. அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.
எனவே இந்த இரட்டை கொலை குற்றவாளிகள் இருவரும் நாடு கடத்தப்படுவது தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதி நேரடி தலையீடு செய்ய வேண்டும் எனவே  ஜனாதிபதி செயலகத்திற்கு தகவல்களை அனுப்பி வைக்க நீதிமன்ற பதிவாளருக்கு மேல் நீதிபதி பணித்தார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply