இலங்கை

கடந்த அரசாங்கம் தொடர்பில் சம்பிக்க கூறிய விடயங்கள் பொய்யானவை – நாமல்


கடந்த அரசாங்கம் தொடர்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறிய விடயங்கள் பொய்யானவை என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஐந்து அரச நிறுவனங்களை வெளிநாட்டு முகாமைத்துவத்தின் ஊடாக அபிவிருத்தி செய்ய திட்டமிட்டிருந்தார் என அண்மையில் சம்பிக்க ரணவக்க வெளியிட்ட கருத்து தொடர்பிலேயே நாமல் ராஜபக்ஸ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் அரசாங்கத்திற்கு சாதகமான உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்பட்டிருந்தது என குறிப்பிட்டுள்ள அவர் தற்போதைய அமைச்சர்கள் பொய்யான பிரச்சாரங்களை செய்து மக்களை பிழையான வழியில், வழிநடத்தவே முயற்சிக்கின்றனர் என குற்றம் சுமத்தியுள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply