அதிகாரப் பகிர்வு தொடர்பில் இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை என கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார். அதிகாரப் பகிர்வு தொடர்பில் பரந்தளவிலான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வெளியிட்டுள்ள கருத்து பிழையானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜனாதிபதி முறைமை, அதிகாரப் பகிர்வு, தேர்தல் சட்டத் திருத்தங்கள் போன்ற விடயங்களில் அனைத்து தரப்பிற்கும் இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக சுமந்திரன் கூறியுள்ளதாகவும், உண்மை அதுவல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விடயங்கள் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் கூட்டு எதிர்க்கட்சிக்கும் இடையில் கொள்கை வேறுபாடு காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Spread the love
Add Comment