இந்தியா

சசிகலாவை மகளிர் சிறைக்கு மாற்றக் கோரிய டிராபிக் ராமசாமியின் வழக்கு தள்ளுபடி


சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை தமிழக அமைச்சர்கள் சிலர் சந்தித்து பேசுவதாகவும்  சசிகலாவைச் சந்தித்த அமைச்சர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுடன்  சசிகலாவை தும்கூர் மகளிர் சிறைக்கு மாற்ற வேண்டுமெனக் கோரி  சென்னையைச் சேர்ந்த் டிராபிக் ராமசாமி கர்நாடக உயர் நீதிமன்றத்தில்  தாக்கல் செய்திருந்த பொது நல மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

குறித்த வழக்கு  நேற்று விசாரணைக்கு வந்த நிலையில்  டிராபிக் ராமசாமியின் உண்மையான பெயர் என்ன என  கேள்வி எழுப்பிய நீதிமன்றம்     அரச ஆவணங்களில் இருக்கும் பெயரைத்தான்   பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்ததுடன்  சசிகலா மீதான புகாரில் எந்த விதிமுறை மீறலும் நடைபெறவில்லை என்ற அரசாங்கத்தின் விளக்கத்தை ஏற்று மனுவை தள்ளுபடி செய்து  உத்தரவிட்டுள்ளது

Add Comment

Click here to post a comment

Leave a Reply