உலகம்

ரஷ்யாவின் மெட்ரோ புகையிரத நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டது தீவிரவாதத் தாக்குதலா என சந்தேகம்


ரஷ்யாவின் மெட்ரோ புகையிரத நிலையங்களில்  மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள்  திட்டமிட்ட தீவிரவாத தாக்குதலாகவே இருக்கக் கூடும் என ரஷ்ய உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும்  குறித்த  தாக்குதல்களுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

குறித்த சம்பவம் தொடர்பில் அண்மையில் வெளியாகியுள்ள தகவல்களின் படி, தாக்குதல்களின் பின்னணியில் உள்ள சூத்திரதாரி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் அவர் தற்கொலை குண்டுத் தாக்குதல்தாரியா என்பது தொடர்பில் சந்தேகம் நிலவுவதாகவும் தெரிவித்துள்ளனர். நேற்று  இடம்பெற்ற  இந்த தாக்குதல்களின்  போது 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 45க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply