கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் ஆகில இலங்கை தமிழ் மொழித் தின விருது வழங்கல் விழா 2017 ஆம் ஆண்டிற்கான நிகழ்வினை இம்முறை வட மாகாணத்தில் நடாத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று அண்மையில் வட மாகாண கல்விப்பணிமனையில் நடைபெற்றது.கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன்,மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளர்,வலய கல்வி பணிப்பாளர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தேசிய ரீதியில் நடைபெற்ற தமிழ் மொழித்தினத்தை முன்னிட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Add Comment