ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் சீன நிறுவனத்திற்கும் அரசாங்கத்திற்கும் இடையில் இறுதி இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை என அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. இன்றைய தினம் பாராளுமன்றில் உரையாற்றிய போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகம் குறித்த இறுதி உடன்படிக்கை கைச்சாத்திடப்படுவதற்கு முன்னதாக அந்த விபரங்கள் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என குறிப்பிட்டுள்ள அவர் துறைமுகம் காரணமாக அரசாங்கம் பாரியளவில் நட்டத்தை அனுபவித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Add Comment