ரஸ்யாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரஸ்யாவின் சென் பீட்டர்ஸ்பெர்க்கில் பகுதியில் வைத்தே குறித்த ஐ.எஸ் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். தீவிரவாத அமைப்பிற்காக ஆட்சேர்ப்பில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த நவம்பர் மாதம் முதல் இவர்கள் செயற்பட்டு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சென் பீட்டர்ஸ்பேர்க் மெட்ரோ புகையிரத நிலையங்களில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் 14 பேர் கொல்லப்பட்டதுடன் 50 பேர் வரையில் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Add Comment