உலகம்

சோமாலியாவில் இடம்பெற்ற கார் குண்டுத் தாக்குதலில் 7 பேர் பலி

சோமாலியாவில் இடம்பெற்ற கார் குண்டுத் தாக்குதலில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சோமாலிய தலைநகர் மொகாடிசு (Mogadishu)  ல் அமைந்துள்ள அரசாங்க  அமைச்சர்களின் வீட்டுத் தொகுதி மதில்களுக்கு அருகாமையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கபே ஒன்றில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தாக்குதலில் கட்டடங்கள் வாகனங்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்களின் வீடுகளுக்கு அருகாமையில் மேற்படி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சோமாலியாவில் அண்மையில புதிதாக பாதுகாப்பு அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டிருந்த மகெமெட் அபூகர் இஸ்லோ ( Mahamed Abuukar Islow )  பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதாக உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Add Comment

Click here to post a comment

Leave a Reply