வரட்சிக்கால அனர்த்தங்களை எதிர்கொள்ளும் பொருட்டு ஜனாதிபதி செயலகத்தினால் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு கையளிக்கப்பட்ட நீர்தாங்கி உழவு இயந்திரங்கள் நான்கு பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு கையளிக்கப்பட்டுள்ளது. இன்று குறித்த நான்கு உழவு இயந்திரங்களும் கரைச்சி கண்டாவளை பச்சிலைப்பள்ளி பூநகரி பிரதேச செயலகங்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் வைத்து மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் நான்கு பிரதேச செயலாளர்களிடம் கையளித்துள்ளார். இதன் போது மேலதிக அரச அதிபர் சி. சத்தியசீலன், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர் ஆகியோர் உடனிருந்தனர்
Spread the love
Add Comment