விளையாட்டு

ஒற்றுமையைப் பேணினால் பங்களாதேஸ் அணி உலக கிண்ண போட்டியை வெற்றிகொள்ளலாம் – அர்ஜூன


ஒற்றுமையான மனநிலையினை பேணினால் பங்களாதேஸ் கிரிக்கெட் அணி எதிர்வரும் உலக கிண்ண போட்டியை வெற்றிக்கொள்ளலாமென முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை கிரிக்கெட் பரிபாலனச் சபையைக் காட்டிலும்  பங்களாதேஸ் கிரிக்கெட் பரிபாலனச் சபை விளையாட்டின் பொருட்டு காட்டுகின்ற ஆர்வம் உயர் மட்டத்திலுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஸ்; – இலங்கை அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் சுற்றுப் போட்டியை பதிவுச் செய்யும் பொருட்டு இலங்கைக்கு வந்துள்ள  பங்களாதேஸ்  விளையாட்டு ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் பொழுதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை கிரிக்கெட் இந்நிலையிலேயே தொடருமாயின் இலங்கை அணியால் டெஸ்ட் போட்டிகளின் பொழுது பங்களாதேசிடம்; தோல்வியுறுமென தான்இரண்டு ஆண்டுகளிற்கு முன்னரே தெரிவித்திருந்ததாகவும்  தற்சமயம் பங்களாதேஸ்  அணியானது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறந்து விளங்குகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.